புயல் எச்சரிக்கை! நாகை துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒடிசாவை ஓட்டிய  வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற உள்ளது.

இதனால் இரவு அல்லது நாளை புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு இருப்பதன் காரணமாக குண்டு ஏற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிகை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment