என்எல்சி நிலம் கையகப்படுத்தல்: தீவிர போராட்டம் நடத்தப்படும் என சீமான் எச்சரிக்கை!

என்எல்சி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு பிறகு பேசிய சீமான், ஏற்கனவே என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு சமமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

புதிய நிலங்களை அந்நிறுவனம் கையகப்படுத்தக் கூடாது என அவர் குறிப்பிட்டார். மேலும், நிறுவனத்தை விரிவுபடுத்தினால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

H3N2 வைரஸ் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை – மா.சுப்பிரமணியன்

கடலூரில் உள்ள என்எல்சி நிறுவனம், அருகிலுள்ள கிராமங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நடவடிக்காக, மக்கள் விருப்பத்திற்கு மாறாக, அருகிலுள்ள விவசாய நிலத்தை என்எல்சி கையகப்படுத்தி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.