சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி நல்லதொரு வரவேற்பு பெற்ற திரைப்படம் கழுகு. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் நடிகர் கிருஷ்ணா. நடிகர் கிருஷ்ணா கழுகு படம் நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடிப்பில் உருவாகி பல படங்கள் திரையில் வெளியாக்கி நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் அவர் நடிப்பில் வெளியான வானவராயன் வல்லவராயன் என்று திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக சமீப காலத்தில் இருந்தது.
மேலும் அவர் நடிகர் தனுஷுடன் மாரி 2 என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் கொண்டாடப்பட்டார். மேலும் அவரது கெட்டப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் அழகிய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவை பார்க்கும் அவர் ரசிகர்கள் மிகவும் சிரிப்புடன் காணப்படுகின்றனர். ஏனென்றால் அவர் கையில் கூல்டிரிங்ஸ் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நீயா நானா யாரு ரொம்ப ரெட் என்று கேட்கிறார். மேலும் அவரின் தலையின் ஒரு புறத்தில் சிவப்பு கலர் சாயம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இவர் ரசிகர்கள் நடிகர் கிருஷ்ணா மிகவும் எளிமையானவர் என்றும் நகைச்சுவை குணம் உள்ளவர் என்றும் கூறுகின்றனர். மேலும் அவரது போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவுகிறது. மேலும் அந்த போட்டோவிற்கு லைக் வந்த வண்ணமாக உள்ளது.மேலும் அவர் சில தினங்களாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் போட்டோ செய்யும் தகவலையும் ட்விட் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Neyya naana…. Yaaru rombo reddu ???????????? hair colour by the talented Ms. Mihira ???? pic.twitter.com/b9yVk22qzO
— krishna (@Actor_Krishna) May 5, 2021