Entertainment
பெண்கள் தின கொண்டாட்டம்…. வெளியான WhattheUff பாடல்.. பட்டையைக் கிளப்பிய டான்ஸ்..
உலகம் முழுவதும் பெண்களை கவுரவிக்கும் விதத்திலும் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை அங்கீகரித்து போற்றும் விதத்திலும் உலக பெண்கள் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக பிரபலங்களும், திரைப் பிரபலங்களும், பெரும் துறைகளில் சாதனை படைத்து முன்னேறிய பெண்கள் பலரும் பெண்கள் தினத்துக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர். இதனிடையே பெண்கள் தினத்தை முன்னிட்டு பல பாடல்களும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இந்த சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்து நடனம் ஆடியுள்ள WhattheUff எனும் பாடல் வெளியாகியுள்ளது. கு.கார்த்திக் எழுதிய இந்த பாடலை ஹரிகா நாராயணன் பாடியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
நெல்சன் வெங்கடேசன் இந்த கான்செப்ட்டை எழுதி இயக்கியுள்ளார். ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ்.
Our next..@thinkmusicindia ‘s #WomensDay Special – #WhattheUff Starring @Nivetha_Tweets https://t.co/FExKTirfD6 ???? thank you @KeerthyOfficial
Concept & Direction by @nelsonvenkat
Penned by #kukarthick @editorsabu @gokulbenoy @santhoshchoreo1 @theroute— Justin Prabhakaran (@justin_tunes) March 8, 2021
