நிவேதா பெத்துராஜ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!.. நிஜமாவே அவங்க போலீஸ் தானா?

நடிகை நிவேதா பெத்துராஜ் காரை ஆந்திராவில் போலீஸார் சோதனையிட்ட போது நிவேதா வாக்குவாதம் செய்யும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

போலீஸாருடன் வாக்குவாதம் செய்தாரா நிவேதா பெத்துராஜ்?:

நிவேதா பெத்துராஜ் 2016ம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் தினேஷுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துவருகிறார். திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், டிக் டிக் டிக் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் மெண்டல் மடிலோ, ஆலா வைகுந்த புரமுலூ சித்ரலஹாரி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும், நிவேதாவிற்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து உள்ளது. இந்நிலையில் உதயநிதிக்கும் நிவேதா பெத்துராஜுக்கும் தொடர்புள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.

மேலும், அரசியல்வாதி மற்றும் நடிகருமான உதநிதி ஸ்டாலின் நிவேதாவிற்கு துபாயில் 50கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி கொடுத்தாகவும், ஆடம்பரமாக பணம் செலவழித்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகின. இருவரும் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

உதயநிதி சர்ச்சைக்கு பதிலடி:

வதந்திகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நிவேதா பெத்துராஜ், கடந்த சில நாட்களாக என்னை பற்றி பல தவறான செய்திகள் வெளியாகி வருகிறது. சில தகவல்களை கூறும் முன்பு சரிபார்க்க வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி மனிதாபிமானம் இல்லாமல் கெடுப்பது தவறான செயல். சமீபகாலமாக நானும் என் குடும்பமும் மன அழுத்ததில் தான் இருந்தோம். இது போன்ற பொய்யான செய்திகளை கூறும் முன் யோசித்து செயல்படுங்கள் எனக் கூறியிருந்தார்.

மேலும், நிவேதா பெத்துராஜ் 20 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் யாரும் தனக்கு வீடு வாங்கி தரவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நிவேதா பெத்துராஜ் காரை வழிமறைத்து போலீஸார் சோதனையில் மேற்கொண்டபோது தனது கார் டிக்கியை திறக்க முடியாது என போலீசாரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். மேலும், அதை ஏன் ரெகர்ட் பண்றீங்க எனக் கூறி கேமராவை பிடுங்கி ஆஃப் செய்யும் வீடியோ வெலியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இருந்த போலிஸ் காலில் ஷூ அணியாமல் செருப்பு அணிந்திருப்பது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நிவேதாவின் அடுத்த படத்திற்கான ப்ரோமோஷனாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://x.com/gharkekalesh/status/1796080041786245370

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...