Connect with us

எட்டாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமார்!! பலரும் பாராட்டு;

Nitish Kumar

செய்திகள்

எட்டாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமார்!! பலரும் பாராட்டு;

இன்றைய தினம் புகார் மாநிலத்தில் ஒரு சாதனை நடைபெற உள்ளது. ஏனென்றால் எந்த ஒரு முதலமைச்சரும் இதுவரை இந்த அளவிற்கு முதல்வராக பதவி ஏற்றதில்லை என்பது போல் அந்த சாதனை காணப்படுகிறது.

அதன்படி பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார். மேலும் காங்கிரஸ், ராஷ்டிரியா ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணி முதலமைச்சராக அவர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்கிறார் நிதீஷ் குமார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பார் எனவும் தகவல் கிடைத்தது. மேலும் பி.கார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதீஷ் குமார் எட்டாவது முறையாக பதவி ஏற்று கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு பலரும் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top