பீகார் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தார் நிதிஷ்குமார்!!

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இடையே மோதல்கள் நிலவிவந்தது. இந்நிலையில் கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமாருக்கு ஆர்ஜஏடி-காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன

அதன் படி, இன்றைய தினத்தில் பீகார் சட்டசபையில்  நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ராஷ்ட்ரியா ஜனதா தளம்,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் நிதிஷ்குமாருக்கு ஆதரவளித்தனர்.

வரும் காலங்களில் பீகார் முதல்வர் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கும் முன்னதாகவே பீகார் சட்டசபையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment