Connect with us

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: சந்திரசேகர் ராவ், நிதிஷ்குமார் புறக்கணிப்பு!!!

narendhra modi 1

செய்திகள்

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: சந்திரசேகர் ராவ், நிதிஷ்குமார் புறக்கணிப்பு!!!

டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில், பாஜக கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

நிதி ஆயோக் 7-வது கவுன்சில் கூட்டம் டெல்லியில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. தேசிய கல்விக்கொள்கை அமலாக்கம், வேளாந்துறையில் தன்னிறைவை ஈட்டுதல், மாற்று பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் நகர்புறம் நிர்வாகம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த கடந்த 2019-ம் ஆண்டிற்கு பின் ஜூலை மாதத்திற்கு பின், முதல்முறையாக இந்த கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநிலங்கள் , யூனியன் பிரதேச முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டத்தால் மாநிலங்களுக்கு ஒரு பலனும் இல்லை என்று பிரமருக்கு கடிதம் எழுதிய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜக கூட்டணியை சேர்ந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top