நித்யா மேனனின் புதுப்பட அப்டேட்…

நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தனது எட்டாவது வயிதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின்பு துணை வேடங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நித்யா மேனன் நடிகையாக உயர்ந்துள்ளார்.

தமிழில் நூற்றியென்பது என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப்பின் ‘வெப்பம்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மெர்சல்’, ‘காஞ்சனா 2’, ‘இருமுகன்’, ‘சைக்கோ’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் என்றால் அது துல்கர் சல்மான் நடித்த ‘ஓ காதல் கண்மணி’ மற்றும் நடிகர் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்கள் தான். இந்தப் படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்றார்.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் நிகழ்ச்சியின் போது நடிகர் தனுஷ் நித்யா மேனன் பற்றி கூறுகையில், நான் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்பும் ஒரு நடிகை என்றால் அது நித்யா மேனன். ஏனென்றால் ஒரு காட்சியை ஒரே ஷாட்டில் முடித்துவிடுவார். இயக்குனர் சொல்வதை அப்படியே புரிந்துகொண்டு கொடுத்த நேரத்தில் ஷாட்டை சரியாக செய்துவிடுவார். அப்படி ஒரு பெர்பெக்க்ஷனாக செய்து முடிப்பார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை நித்யா மேனன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காமினி இயக்கத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர். பெயர் வைக்கப்படாத இந்தப் படம் ரொமான்ஸ், பாண்டஸி, காமெடி கலந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் நாயகனாக வினய் ராய், மேலும் நவதீப், ப்ரதீக் பாப்பர், தீபக் பரம்போல் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு ப்ரீத்தா ஜெயராமன் மற்றும் சண்முகராஜா கலை இயக்கம் ஆகிய பணிகளை செய்ய உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...