ஒரே ஒரு நடிகை மட்டும் நடித்த படம் எது தெரியுமா?

ce16170edac26a4ac64ef6ec3e5b3d0bவெளிநாட்டு மொழி படங்களில் மட்டுமே இதுவரை ஒரே ஒரு நடிகர் அல்லது ஒரே ஒரு நடிகை நடித்த படம் வெளிவந்துள்ள நிலையில் தற்போது நித்யாமேனன் நடித்து வரும் படம் ஒன்று ஒரே ஒருவர் மட்டுமே நடித்த படமாக அமைந்துள்ளது.

ஆம், விகே பிரகாஷ் என்ற இயக்குனர் இயக்கியுள்ள ‘பிரன்னா’ என்ற திரைப்படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நித்யாமேனன் தவிர வேறு யாரும் நடிக்கவில்லை. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் எபெக்ட் செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment