பிக் பாஸ் சீசன் 5 முடிந்தபின்பு பிக் பாஸ் ரசிகர்களை சோகம் அடையக் கூடாது என்பதற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் இன்று ஒரு போட்டி ஒன்றினை வைத்துள்ளது. அந்த போட்டி கல்லூரி தேர்தல் போட்டியாக காணப்படுகிறது. இதில் வேட்பாளர்களாக நிருப் மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளனர்.
இந்த நிலையில் பாலாஜிக்கு ஆதரவாக ஜூலி, அபிராமி, தாமரை உள்ளிட்டோர் உள்ளனர். அதேவேளையில் நிருப்புக்கு ஆதரவாக சினேகன், சாரிக் ஆகியோர் உள்ளனர்.
அப்போது மாறி மாறி இருவரையும் கலாய்த்து கோஷமிட்டனர். இவையெல்லாம் தாண்டி பிரின்ஸ்பல் ஆக அமர்ந்திருந்த தாடி பாலாஜியை பாலாஜி அணியினர் கலாய்த்து கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த பாலாஜி அவர்களை வன்மையாக திட்டியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது. அதுவும் ஜூலி அந்த கோசத்தில் அதிக எனர்ஜியோடு கத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.