’பொய் பொய்’ என திடீரென நாடாளுமன்றத்தில் கத்திய தயாநிதி மாறன்: என்ன செய்தார் நிர்மலா சீதாராமன்?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென திமுக எம்பி தயாநிதிமாறன் எழுந்து ’பொய் பொய் என கத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரு நிறுவனங்களுக்கு கடன்களை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக மாணவர்களுக்கு கல்விக் கடனை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலளித்தார். பெரிய நிறுவனங்கள் யாருக்கும் கடன்களை ரத்து செய்யவில்லை என்றும் ரைட் ஆப் என்பது வேறு, ரத்து என்பது வேறு என்றும், ரைட் ஆப் செய்த நிறுவனங்களுக்கு தற்போது அவர்கள் தந்த சொத்துப் பத்திரங்களில் ஆதாரத்தின் அடிப்படையில் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

nirmala sitharaman 07 1504778778

மேலும் பெருநிறுவனங்களுக்கு கடன்களை ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை பெறுவதற்காக கல்விக் கடன் கொடுக்காமல் இருக்கிறோம் என்று கூறப்படுவது தவறு என்றும் இது உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டு என்றும் அவர் தெரிவித்தார்.

கல்விக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று ஒரு பரிந்துரை செய்யலாம் அது தவறில்லை என்றும் ஆனால் பெரு நிறுவனங்களுக்கு சலுகை செய்துவிட்டு கல்விக் கடனை கொடுக்க மறுப்பதாக கூறப்படுவது உள்நோக்கத்துடன் கொண்ட குற்றச்சாட்டு என்றும் கூறினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த திமுக எம்பி தயாநிதி மாறன் பொய் பொய் என கத்தினார். இதனை அடுத்து பொய் என்ற வார்த்தையை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது வார்த்தை என்றும் அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.