Connect with us

ஒரு பக்கம் நிபா, இன்னொரு பக்கம் கொரோனா: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?

Tamil Nadu

ஒரு பக்கம் நிபா, இன்னொரு பக்கம் கொரோனா: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?

f2b322054670da1b68e4ab093611bfa5-2

ஒருபக்கம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு இன்னொரு பக்கம் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஆகியவை காரணமாக மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காரணமாக பலியாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டதால் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு மற்றும் நிபா வைரஸ் காரணமாக ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top