தற்போது நம் தமிழகத்தில் அனைவரும் சாப்பிடும் நோக்கத்தோடு இலவச அரிசி நியாய விலை கடை என்றழைக்கப்படுகின்ற ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. இவை தமிழகத்தின் எளிய மக்களுக்கு மிகவும் உகந்ததாக அளிக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு ஆகாரத்திற்கு இந்த அரிசியை மிகவும் உகந்ததாக காணப்படுகிறது. மேலும் தரமான ரேஷன் அரிசியில் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அவ்வப்போது இந்த ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இவை பல்வேறு வகையில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. அதன் வரிசையில் தற்போது இரண்டு படகுகளில் 9 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சித்த பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பழவேற்காடு முகத்துவாரத்தில் நடைபெற்றுள்ளது. அந்த படி பழவேற்காடு முகத்துவாரத்தில் இரண்டு படகுகளில் கடத்த முயன்ற ஒன்பது டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவுக்கு படகு மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற போது கடலோர காவல்படை அந்த முயற்சியை தடுத்து பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூர்த்தி அவரது மகன் ராஜ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு நாளுக்கு நாள் இதுபோன்ற நடைபெறுவது தமிழகத்தின் ஏழை மக்களின் நிலைமை கேள்விக்குறியாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் இந்த அரிசியிலும் கொள்ளை அடிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.