தமிழக பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: மாணவ, மாணவிகள் உற்சாகம்!

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. 6, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு காலையிலும் 7, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருவதாகவும் தேர்வுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை பள்ளிகளே தயாரித்துக்கொள்ள பள்ளி கல்வி துறை அனுமதி தந்த நிலையில் அரையாண்டு தேர்வுக்கு தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் பின்பற்றப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தொடங்கும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி முடிவடையும் நிலையில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.