ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் மாதம் தான் தமிழகத்தில் கன மழை பொழிவானதே அதிகமாக கிடைக்கும். ஆனால் மே மாதம் முதலை தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.
இதன் விளைவாக பல சுற்றுலா தளங்களில் அங்கு அமைந்துள்ள அருவிகளில் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டன. மேலும் தற்போது நீர்வளத்துறை சில முக்கிய அறிவிப்பினை கூறியுள்ளது.
அதன்படி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழையால் தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள ஒன்பது அணைகள் முழு கொள்ளளவான 100 சதவீதத்தை எட்டி நிரம்பியுள்ளன. அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலை ஆறு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வருத்தமாநதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரட்டு பள்ளம், மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆகிய அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளன.
மேலும் 80 சதவீதத்திற்கும் மேல் 9 நீர்த்தகங்கள் நிரம்பியுள்ளதாகவும் கூறியுள்ளது அதன்படி குள்ளூர் சந்தை, ஆழியாறு ஆகிய அணைகளும் நிரம்புகின்றன. மேலும் கிருஷ்ணகிரி, ராமாநிதி, மருதாநதி, வைகை தேனி ஆகிய அணைகளும் நிரம்பிக் கொண்டு வருகின்றன.
தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆண்டியப்பனூர் ஓடை, மோர்தனா அணைகளும் மெல்ல மெல்ல நிரம்பி கொண்டு வருகின்றன. செம்பரம்பாக்கம், புழல், வறட்டாறு, பாம்பாறு, குதிரையாறு, அமராவதி ஆகிய அணைகளும் நிரம்பி கொண்டு வருகின்றன.