Connect with us

நீலகிரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

பள்ளிகள் விடுமுறை

தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

நம் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தினந்தோறும் கன மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவற்றுள் நீலகிரி மாவட்டமும் ஒன்றுதான். இந்த கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து வந்தார்.

இந்த உத்தரவினை மீறி ஏதேனும் பள்ளி கல்லூரிகள் இயங்கினால் அதன் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். விடுமுறையானது இன்றைய தினமும் தொடர்வதாக காணப்படுகிறது.

அதன்படி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து அங்கு மூன்றாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top