Connect with us

திம்பம் மலைப்பகுதியில் இரவு நேர போக்குவரத்து தடை? வழக்கு ஒத்திவைப்பு!!

DHIMBAM

தமிழகம்

திம்பம் மலைப்பகுதியில் இரவு நேர போக்குவரத்து தடை? வழக்கு ஒத்திவைப்பு!!

திம்பம் மலைப்பகுதியில் இரவு நேர போக்குவரத்து தடை? வழக்கு ஒத்திவைப்பு!!

சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் சாலைகளில் இரவு நேரங்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருந்தது. அதோடு மனுவில் தடை உத்தரவால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு பெரும் சிரமப்படுகின்றனர் என்று கூறியிருந்தார்.

அதற்கு நீதிபதிகள் இரவு நேரங்களில் எந்த ஒரு பள்ளியிலும் இயங்கவில்லை என்று பதில் கொடுத்தனர். இவ்வாறு உள்ள நிலையில் இன்று திம்பம் மலைப்பகுதியில் இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

உள்ளூர் கிராம மக்களின் ஆதரவை கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. சாலையை விரிவுபடுத்த கூடாது என்றும் அப்பகுதியில் 45 தனியார் விடுதிகள் உள்ளன என்றும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 45 தங்கும் விடுதிகளின் விவரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top