நள்ளிரவில் பயங்கரம்! தீக்கிரையான இருசக்கர வாகனம்..!!

திருவள்ளூரில் வீட்டின் வாசல் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த பெரிய தெருவில் வசிப்பவர் மகிமைராஜ். இவரது வீட்டில் வழக்கம் போல் தூக்கிகொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டின் வெளியே பயங்கர சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வீட்டின் வெளியே வந்து பார்த்தப்போது இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அதே சமயம் தீ மளமளவென பரவி அருகில் இருந்த கார் மீது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதனிடையே அருவில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இருப்பினும் கார், இருசக்கர வாகனம் முழுவதுமாக தீப்பற்றி நாசமானது. தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் தீ விபத்து நடந்த இடத்தின் அருகே பீர் பாட்டில் மற்றும் கண்ணாடி துண்டுகளை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.