இரவு நேர ஊரடங்கு: பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்குமா? பேருந்து போக்குவரத்து சேவை தொடருமா?

நாளைய தினம் முதலில் நம் தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு போது வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு எவற்றுக்கெல்லாம் அனுமதி என்ற தகவல் கிடைத்துள்ளது அதன்படி இரவு நேர ஊரடங்கு பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிகை வினியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், ஏடிஎம்கள், சரக்கு வாகனம் எரிபொருள் வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. அதோடு பொதுப் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தொழிற்சாலைகளில் இரவு நேர பணிக்கு செல்லும்போது அடையாளஅட்டை மற்றும் தகுதி சான்று வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment