நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்: தமிழக அரசு அறிவிப்பு!

ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிப்பு வெளியாகி கொண்டு வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு வாட்டி வதைத்த கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பும் அதிகமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு மெல்ல மெல்ல அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நம் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு இருக்குமா? என்று சில நாட்களாக கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

அதற்கு விடை தரும் விதமாக தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த தமிழகத்தில் நாளை ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு போது வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment