Connect with us

தமிழகத்தைப் போல மற்றொரு மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து! பள்ளிகள் திறப்பு!!

இரவு நேர ஊரடங்கு

செய்திகள்

தமிழகத்தைப் போல மற்றொரு மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து! பள்ளிகள் திறப்பு!!

தமிழகத்தைப் போல மற்றொரு மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து! பள்ளிகள் திறப்பு!!

நம் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு பல முக்கிய அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் கிடையாது என்று அரசு கூறியிருந்தது.

கொரோனா குறைந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது. இந்த நிலையை தமிழகத்தினை போல மற்றொரு மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்பட உள்ளது.

அதன்படி கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்து அம்மாநில அரசு கூறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி முதல் கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

அதேவேளையில் கர்நாடகாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாக முதல் அமைச்சர் பசவராஜ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top