நம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அநாகரிகமான செயல் அவ்வப்போது அரங்கேறி கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளையே கழிப்பறை கழுவ சொல்வது மிகுந்த வேதனைக்குரியதாக காணப்படுகிறது.
இதற்கு காரணமாய் இருந்து ஆசிரியர்கள் பலரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மற்றுமொரு அரசு பள்ளியில் உணவு சமைத்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே ஊராட்சி பள்ளி ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் உணவு சமைத்ததாக தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தலைமை ஆசிரியர் உட்பட சக ஆசிரியர்களிடமும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாதேஷ் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டு வருகிறார். எந்த ஒரு அனுமதியும் பெறாமல் பள்ளியில் உணவு சமைத்தது தொடர்பாக அனைவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கூறியுள்ளார்.
பள்ளியை சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அளித்த புகாரியில் விசாரணை நடத்தப்பட்டது.