
News
நைஜீரியா: குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!!
நைஜீரியாவில் குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் உள்ள ஏழை நாடாக கருதப்படுவது நைஜீரியா. இங்கு போர்ட் ஹர்கோர்ட் என்ற நகரில் மிகவும் பழமைவாய்ந்த மிகவ்கிங்ஸ் அசெம்பிளி என்ற கிறிஸ்தவ ஆலயம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆலயத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்ற போது 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் செல்ல முயற்ச்சி செய்தப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக இரிங்கே-கோகோ செய்தியாளர்களிடம் கூறும்போது ஆலயத்தில் நிகழ்ச்சி நடைப்பெற்று இருந்தபோது உணவு வழங்கும் திட்டம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் கதவுகள் திறக்கப்படாமல் இருந்த போதிலும் போட்டிப்போட்டிக்கொண்டு அங்கு சென்றதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் 7 பேர் காயங்களுடம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அவர் கூறினார்.
