Share Market: சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 130 புள்ளிகளும் உயர்வு; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை முதலே உயர்வுடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகளாவிய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியுள்ளதால், இந்திய பங்குச்சந்தைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 403.14 புள்ளிகளுடன் 0.66 சதவீதம் உயர்ந்து 57,001 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 119.75 புள்ளிகளுடன் 0.67 சதவீதம் உயர்ந்து 16,972 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது, ரஷ்யா – ஐரோப்பா இடையிலான எரிவாயு பிரச்சனை, பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் இங்கிலாந்தின் நாணயமான பவுண்ட் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

வரலாறு காணாத அளவிற்கு சரிந்து வரும் பவுண்டின் மதிப்பை சரி செய்வதற்காக பேங்க் ஆப் இங்கிலாந்து (BOE) அரசாங்க கடன் பத்திரங்களை தற்காலிகமாக வெளியிட முடிவு செய்துள்ளது. இதனால் பங்குச்சந்தைகளில் நிலவி வரும் எதிர்மறையான நிலை மாறக்கூடும் என முதலீட்டாளர்களுக்கு நம்புகின்றனர்.

இதனால் ஆசிய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் பச்சை நிறத்திற்கு மாறியுள்ளது, அதன் தாக்கம் காரணமாகவே இந்திய பங்குச்சந்தையின் வர்த்தகமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment