நம் தமிழகத்தில் தற்போது அனைத்து விதமான துறைகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் GATE மதிப்பெண் அடிப்படையில் தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி பிரபல நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் GATE மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முறையை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
பணியாளர்களை தேர்வு செய்ய முடிவினை மாற்றிட பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதத்தில் கூறியுள்ளார். என்எல்சி நிலம் வழங்கும் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்குமாறு மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
உள்ளூர் மக்களிடையே எழுந்துள்ள நியாயமான கோரிக்கைகளை கடிதத்தில் சுட்டிக்காட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுவும் பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் பணிக்கு இந்த கேட் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
GATE அடிப்படையில் பணி என்பது தேர்வு எழுத உள்ளூர் விண்ணப்பதாரர்கள் பாதிப்படையும் என்றும் எதிர்காலத்தில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையின்போது என்எல்சி நிறுவனம் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.