நெய்வேலி என்எல்சி: நூறு சதவீதமும் வட இந்தியர்களே! தேர்வு திமுக எம்.பி கண்டனம்;

இந்தியாவிலேயே பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடமாக காணப்படுகிறது நெய்வேலி. இது தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி தோன்டுவதற்கு அங்குள்ள மக்கள் நிலத்திலே கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால் அங்கு பணியமற்றவர்களோ வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது போல் தெரிகிறது. இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். என்எல்சி யில் 299 பட்டதாரி பொறியியல் பணியிடங்களுக்கு வட இந்தியரை தேர்வு செய்துள்ளதற்கு டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பணி வாய்ப்பு வட இந்தியருக்கு தரப்பட்டுள்ளது வேதனை மற்றும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார். என்எல்சிக்காக அப்பகுதியில் 30 கிராம மக்கள் தங்களின் வாழ்வாதார நிலமான அந்த நிலங்களை தந்துள்ளனர் என்றும் கூறினார்.

தமிழர்கள் தந்த நிலத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் என்எல்சியின் 100% பணி வாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கும் வகையில் பணி நியமனம் தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment