கொரோனா பரவலை ஒட்டி தமிழ்நாட்டில் இன்று முதல் ஒவ்வொரு ஞாயிறு முழுவதும் லாக் டவுன் கடைபிடிக்கப்படுகிறது.
இது வரும் வாரங்களிலும் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டுப்பொங்கல் திருவிழா வருகிறது.
மாட்டுப்பொங்கலன்று கிராமங்களில் அதிகமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் அவனியாபுரம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
பொங்கல் பண்டிகையன்று அடுத்த நாள் எப்போதும் அதிகமான கூட்டங்கள் சுற்றுலா தலங்களில் இருக்கும் இந்த முறை கொரோனா பரவலால் ஞாயிற்றுக்கிழமை லாக் டவுன் கடைபிடிக்கப்படுகிறது.
எனினும் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கலன்று தமிழ்நாடே களை கட்டி இருக்கும் என்பதால் அடுத்த வாரம் மாட்டுப்பொங்கலன்று ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று மட்டும் நீக்கப்படலாம் எனவும் தெரிகிறது .இது குறித்து நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.