அடுத்தது முதியோர் பென்ஷன் தான்! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்றைய தினம் வங்கி மேல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் பல்வேறு விதமான முக்கிய தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது நம் முதல்வர் முக ஸ்டாலின் பொருளாதார குழுவுடன் ஆலோசித்து வருகிறார்.மு க ஸ்டாலின்

அதில் அந்த கருத்துகள் அனைத்தும் தனது அரசுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது என்று பொருளாதார குழுவுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆலோசனைக் குழு பரிந்துரைத்த அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றன என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்த பயத்தை முற்றிலும் மக்களிடமிருந்து போக்கி உள்ளோம் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 72 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment