அடுத்ததாக தங்களின் திருமணத்தை அறிவித்த சின்னத்திரை ஜோடி….!

இப்போலாம் வெள்ளித்திரைய விட சின்னத்திரைல தான் காதல் திருமணம் அதிகரித்து வருகிறது. ஒரு சீரியலில் ஜோடி சேர்ந்து நடித்தாலே அந்த சீரியல் முடிவதற்குள் அந்த ரீல் ஜோடி திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாகி விடுகிறார்கள். அதனால் சமீபகாலமாக சின்னத்திரையை திருமணம் முடிவாகும் மேட்ரிமோனி என்று தான் கிண்டல் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்தாண்டு ஏராளமான சின்னத்திரை ஜோடி திருமணம் செய்து கொண்டனர். உதாரணமாக ஷபானா – ஆர்யன், சித்து – ஸ்ரேயா, ரேஷ்மா – மாதன் ஆகியோர். தற்போது இந்த வரிசையில் மேலும் ஒரு இளம் சின்னத்திரை ஜோடி இணைய உள்ளது. அவர்கள் வேறு யாருமல்ல தீபக் மற்றும் அபிநவ்யா ஜோடி தான்.

deepak

தீபக் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் அறிமுகமானவர். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அதேபோல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், ஆங்கர், நடிகை என கலக்கிய அபிநவ்யா சித்திரம் பேசுதடி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க கடந்தாண்டு மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து வரும் 27 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருமணத்திற்காக மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கும் வீடியோ ஒன்றை அபிநவ்யா அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அபிநவ்யா சமீபத்தில் கூட சீரியல்களில் அஜெஸ்மெண்ட் குறித்து மிகவும் தைரியமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment