மக்களே உஷார்!! அடுத்து வந்துவிட்டது பாக்டீரியா..எச்சரிக்கும் வல்லுநகள்…
கொரோனா என்னும் கொடியோ வைரஸ் உலகை ஆட்டிபடைத்து வருகிறது. இந்த வைரஸ்சால் கோடி கணக்கான மக்கள் பாதிப்படைந்த நிலையில் லட்சம் நபர்களின் உயிர்களை காவு வாங்கியது.
இந்த நிலையில் இதிலிருந்து இன்னும் முழுமையான மீண்டு வராத போது அடுத்த அவதாரமாக பாக்டீரியாக்கள் வந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட பாக்டீரியாக்களால் உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த முடியவில்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டில் 204 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த வகை பாக்டீரியாவால் மட்டும் 49.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆராய்ட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நாம் ஆண்டி பயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் அதிகம் பயன்படுத்துவதாலும், மருத்துவர் கூறிய நாட்களை விட குறைவான நாட்களுக்கு மருந்து உட்கொள்வது போன்ற காரணங்களால் நுண்ணுயிர் எதிர்ப்பு உருவாகுவதாக கூறுகின்றனர்.
