கொரோனா பரவியது முதல் இதுவரை உலக சுகாதார நிறுவனம் வகுத்து கொடுக்கும் அறிவிப்புகளையே தொடர்ந்து உலக நாடுகள் முதல் உள்ளூர் மாநில முதல்வரை வரை அந்த அறிவிப்புகளை அமல்படுத்தி வருகின்றனர்.
கொரோனா குறித்து செய்திகளையும் மாஸ்க் அணிதல் , தடுப்பூசி போடுதல் போன்ற செய்திகளையும் தொடர்ந்து இந்த நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் ஏற்படும் கொள்ளை நோய்களில் இருந்து மக்களை காப்பது உலக சுகாதார நிறுவனத்தின் கடமையாகும்.
இந்த நேரத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்ட டெல்டா தொற்றின் உயிரிழப்புகள் போல் அல்லாமல் இருக்க பரவி வரும் ஓமிக்ரான் குறித்து எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என ஓமிக்ரான் தொற்று பரவி வரும் நிலை குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.