Connect with us

அடுத்த ஒரு மாதத்திற்கு ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’-டிஜிபி அதிரடி உத்தரவு!

operation cannabis

Tamil Nadu

அடுத்த ஒரு மாதத்திற்கு ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’-டிஜிபி அதிரடி உத்தரவு!

அடுத்த ஒரு மாதத்திற்கு ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’-டிஜிபி அதிரடி உத்தரவு!

நம் தமிழகத்தில் தற்போது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்த வேண்டுமென்று டிஜிபி சைலேந்திரபாபு ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்தப்பட வேண்டுமென்று காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அடுத்த ஒரு மாதத்திற்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்த வேண்டுமென்று காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பள்ளி கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

போதை பழக்கத்திற்கு அடிமையான  மாணவர்களை கண்டறிந்து மனநல ஆலோசகரிடம் அனுப்பி கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார். பார்சல் மூலமாக போதை மருந்துகள் மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top