அடுத்து வரும் படம் விஜய், கமலுக்கு தான்! கன்ஃபார்ம் பண்ணார் வெற்றிமாறன்!!

விஜய் கமல் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக்கொண்டு வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். ஏனென்றால் அவரது சாதனையை இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பதே தவிர்க்கமுடியாத உண்மையாக உள்ளது.வெற்றிமாறன்

நடிகர்  தனுசுக்கு , இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அனைத்து படங்களும் நடிகர் தனுசுக்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் அவர் இயக்கிய அசுரன் திரைப்படத்திற்கு சில தினங்களுக்கு முன்பு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய் மற்றும் கமல் ஆகியோர் வைத்து படங்களை இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. அது குறித்து தற்போது  இயக்குனர் வெற்றிமாறன் விளக்கமளித்தார்.

தற்போது உள்ள பணிகளை முடித்து விட்டு வருமாறு நடிகர் விஜய் கூறியதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் உலகநாயகன் கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் இயக்குனர் வெற்றிமாறன் விளக்கமளித்தார்.

இதனால் வரும் நாட்களில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் கமல் மற்றும் நடிகர் விஜய்யை வைத்து படத்தை இயக்குவார் என்பது உறுதியாகி உள்ளது.இதனால் விஜய் மற்றும் கமல் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print