Entertainment
மே 1 ல் பிங்க் எதிர்பார்ப்பில் அஜீத் ரசிகர்கள்
ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தை தமிழில் அஜீத் நடிக்க ரீமேக் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே.

இந்த படத்தை சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களின் மூலம் வெற்றிக்கொடி நாட்டிய ஹெச். வினோத் இயக்குகிறார்.
மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். ஹிந்தியில் இந்த படத்தில் அமிதாப் நடித்திருந்தார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் ரோலை அஜீத் நடிக்கிறார் என்றால் அது நிச்சயம் வெயிட்டான ரோல் ஆகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இவ்வளவு நாள் விஸ்வாசம் வெற்றியை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் இப்போது பிங்க் பக்கம் தாவி விட்டனர். அஜீத்தின் பிறந்த நாளான வரும் மே மாதம் 1 ம் தேதிக்கு படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதால் மிக வேகமாக வேலை நடக்கிறது.
ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. எது எப்படியோ இன்னும் 4 மாதத்தில் அடுத்த ஒரு விருந்தை அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
