சென்னையில் 5 நாட்களுக்கு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை

சென்னையில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து பெரும் சிரமத்தை அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் 5 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ’மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது என்றும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் அதிககனமழை வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment