அடுத்த ஆறு நாட்களுக்கு ஸ்கூல் லீவு! தீபாவளி விடுமுறை!! மாணவர்கள் கொண்டாட்டம்!!

தற்போது நம் இந்தியாவில் தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாட்களே உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. தீபாவளி நெருங்கி விட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். புதுச்சேரி

இந்த நிலையில் பள்ளிகளுக்கும் தற்போது விடுமுறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதுச்சேரியில் தொடர்ந்து 6 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தது புதுச்சேரி மாநில அரசு. இந்த விடுமுறை ஆனது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது.

ஏனென்றால் புதுச்சேரியில் நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக நவம்பர் இரண்டாம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி விடுமுறை என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment