அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்..?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் மாண்டஸ் புயலின் கோரத்தாண்டவதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதிர்ச்சி! நேருக்கு நேர் மோதிய பைக்… 2 பேர் பலி!!

அதன் ஒரு பகுதியாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் திருவண்ணாமலை, வேலூர், கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

நள்ளிரவு முதல்! ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்..!!

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.