தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வருகின்ற டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பில் மோசடி: 5 நிறுவனங்ககளில் ரூ.290 கோடி கண்டுபிடிப்பு!!
இந்த சூழலில் கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கார்த்திகை தீபம்: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என கூறப்பட்டுள்ளது.