அலர்ட்!! அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குமாம்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு, அம்பத்தூர், தண்டையார் பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெயக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment