வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி..!!
அதே போல் ஈரோடு, கரூர், நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, புதுக்கோட்ட, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை மையம் கூறியுள்ளது. அதே போல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மோடியை கொல்லுங்கள்! காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் கைது!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.