அடுத்த 3 மணி நேரம்.. 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில்..!!

அதன் படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி உணவில் பல்லி! 9 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment