தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
கோவை கார் குண்டுவெடிப்பு: மேலும் 3 பேர் கைது..!!
அதே போல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடி தூள்!! டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி..!!
மேலும், சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை புயலாக மாறும் என்பதால் நாளைய தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.