அடுத்த 3 மணி நேரம்.. 11 மாவட்டங்களுக்கு அலர்ட் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இனி ஒவ்வொரு வாரமும்! டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு..!!

இந்நிலையில் நாகை, கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

திமுக நிர்வாகிகள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு..!!

தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது மிதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.