அடுத்த 3 மணி நேரம்! 7 மாவட்டங்களில் – வானிலை அப்டேட்!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே தொடங்கிய போதிலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இன்று முதல் 21-ம் தேதி வரை… எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

இதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது. அதே போல் பருவமழையின் காரணமாக உயிர்சேதங்களும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு ரூ.5000 – அதிமுக முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!

மேலும், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.