அடுத்த 3 நாட்கள்! வானிலை மையம் நியூ அப்டேட்..!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலை பகுதிகள் நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் வருகின்ற 3-ம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.