உஷார்!! அடுத்த 2 மணி நேரம்.. 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஜாக்பாட்!! காரைக்கால் துறைமுகத்தில் 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி!!

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கழிவறையை சுத்தம் செய்த தலித் மாணவர்கள்: தலைமையாசிரியர் கைது!!

மேலும், வருகின்ற டிசம்பர் 7ம் தேதி வங்கக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதால் தமிழ்நாடு, புதுவை ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.