அடுத்த 2 நேரம்.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வரும் நிலை காரணமாக புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

குஷியோ குஷி!! ஜன-3 ம் தேதி நாகையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!

இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் கடலூர், மயிலாடுதுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மார்கழி அமாவாசை: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!!

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.