Connect with us

அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டத்தில் கனமழை! அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டத்தில் மிதமான மழை!!

கனமழை

செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டத்தில் கனமழை! அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டத்தில் மிதமான மழை!!

அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டத்தில் கனமழை! அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டத்தில் மிதமான மழை!!

நம் தமிழகத்தில் அடுத்தடுத்து பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.கனமழை

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதோடு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி கடலூர், சேலம், பெரம்பலூர், தர்மபுரி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top