டாஸ் வென்ற நியூசிலாந்து: இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 தொடர் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாக இருக்கும் நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் நியூஸிலாந்து கேப்டன் டாஸ் வென்றதையடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்குமே இன்றைய போட்டி மிகவும் முக்கியமானதாகும். இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி கிட்டதட்ட அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறும் நிலை ஏற்படும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அணியில் ஷர்துல் தாக்குர் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபக் சஹார் இன்று அணியில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் அவர் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது என்று குறிப்பிட தக்கது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.